“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில்
அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது
ஏழாவதுமுறையாக
குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார்
தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில்” பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு
அவரது பையையும் பரிசோதித்துவிட்டார்.
ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு.
காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்துஅதை கீழே தள்ளி விட்டிருக்கலாம்.
கண்களைப்பிடுங்கி கீழே வீசி பொறுமையாகத் துழாவினார்.
பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார்.
அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல
அவரிடம் இப்போது கூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது.
ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும்இடதுபுற எலாஸ்டிக் பட்டையில்
அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக அவருக்கு தெரியாது.
நாம் அசட்டை செய்வது போலவோ
கிண்டலடிப்பது போலவோ
அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை.
அவரது இல்லத்து அரசி
அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு
பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.
நன்றி : காலச்சுவடு மே இதழ்
Comments