அப்பா தியாகி
அம்மா சாமீ
கணவனும் மனைவியும் உடனொருபாகம்
தங்கை நறுமணத்தி
அண்ணன் துப்பாக்கி குண்டிற்கு குறுக்கே விழுபவன்
குழந்தைகள் தெய்வப் பிரஸாதம்
தாத்தா உழைப்பால் உயர்ந்த உத்தமர்
பாட்டி உத்தமரின் உறுதுணை
மாமா மாமருந்து
சித்தி குளிர்தரு
ஆனாலும்
வீட்டை நெருங்குகையில் மூக்கைப் பிடித்துக் கொள்ளவேண்டும்.
அங்கு ஏதேனும் ஒன்று அழுகி
எப்போதும் ஒரு கெட்ட நாற்றம் வீசுகிறது.
Comments