சினிமாவில் வருவதைப் போன்றே
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தேன்.
சினிமாவில் வருவதைப் போன்றே
வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.
சினிமாவில் வருவதைப் போன்றே
எனக்கு ஒரு அழகான தாடி முளைக்குமா ?
K.J.ஜேசுதாஸ் எனக்காக பாடுவாரா ?
நான் ஒரு அகல்விளக்காக
காற்று வந்து என்னை அணைக்கப் பார்க்குமா ?
சினிமாவில் வருவதைப் போன்றே
மரணத்தின் மரத்தடியில்
எனக்கு ஞானம் பிறந்து விடுமா ?
எனக்கு ஞானம் பிறந்து விடுமா ?
சினிமாவில் வருவதைப் போன்றே
என் மனைவி
கடைசியாக
தன் பொட்டுத்தாலியையும் அடகுவைப்பாளா ?
”ஒரே
ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்”
என்று கேட்டு
என்னுடைய ஏழு காதலிகளில் எந்தக்காதலி
வாசலில் வந்து நிற்பாள் ?
Comments