Skip to main content

Posts

Showing posts from 2015

புண் உமிழ் குருதி - சுகுமாரன்

           பு திய நூற்றாண்டில் நவீன தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமான குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலரில் இசையும் ஒருவர். ஒருவர் மட்டுமல்ல. முக்கியமான ஒருவர். இசையின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு தற்காலக் கவிதை பற்றிய சித்திரத்தைத் தீட்ட முடியாது என்ற அளவுக்கு முக்கியமானவர். நவீன கவிதை உச்சநிலையிலிருந்த சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் அரங்குக்கு வந்த கவிஞர்களுக்கு இலக்கிய அடிப்படையிலான சலுகையொன்று இருந்தது. அதுவரை எழுதப்பட்டு உருவான கவிதை மொழியைப் பின் பற்றி தொடக்க காலக் கவிதைகளை எழுதி விட முடிந்தது. முன்னோடிக் கவிஞர் ஒருவரின் சாயலில் எழுதிப் பார்த்து விட்டுத் தன்னுடையதான பிரத்தியேக கவிதைமொழியை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. ஆத்மாநாமையே எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ஆரம்ப காலக் கவிதைகளில் அன்று எல்லாரின் கவனத்துக்கும் உரியவராக இருந்த ஞானக்கூத்தனின் சாயல் தெரிந்தது. அவரது தொடக்க காலக் கவிதைகளில் ஒன்றான ' இன்னும் ' என்ற கவிதையில் இதைப் பார்க்கலாம். ' புறாக்கள் பறந்து போகும்  கழுத்திலே வைரத்தோடு  கிளிகளும் விரட்டிச் செல்லும்  காதலின் மோகத்தோடு '

ஊக்கமுடைமை

                   அ) சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் வண்டியைப் போட்டு விட்டு பேருந்தேறினேன். இமயம் தொட்டுவிடும் தூரம் தான் ! ஆ)     உடல்முழுக்கச்  சிராய்த்துக்கொண்டு   மரமேற கற்றுக்கொண்டு விட்டேன்.   எவரேனும்   இந்த “ ஜெயக்கனியை” கண்டீரா? இ )        தொறந்தடிச்சு        விழுந்ததொரு மதகரி        தொட்டதோர் காணாக்கடி.

மொழி

           “ feel good movies” என்கிற பதத்துடன் கூடவே நினைவில் எழும் படங்களில் பிரதானமானது “மொழி”. பிருத்விராஜின் முகத்திலும், கொஞ்சு தமிழிலும் இயல்பிலேயே ஒரு “feel good “ உண்டு. ஆனால் படத்துக்கு இந்த மென் உணர்வை வழங்கும் காரணி எதுவென்று அவ்வளவு தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. ஒரு வேளை அது ஒன்றாக இல்லாமல் பலவாக இருக்கலாம். ஒருவர், “ சாலையின் கறுப்பு-வெள்ளை கோடுகளை கீ- போர்டாக்கி ஆடும் நடனத்தில் மகிழ்ந்தாரெனில், இன்னொருவர் அந்த உயர்தர அப்பார்ட்மெண்ட் வீட்டின் கலையழகிலும்,  அந்த “ bean bag “ –ன் சொகுசிலும்” மயங்கி இருக்கலாம். ஓர் ஊமைப்பெண்... அவளைக் கண்டு காதலுற்று பிரிந்து வருந்தி கடைசியில் சுபமாக கைபிடிக்கும் ஒரு இசைக்கலைஞன்.. இவர்கள் இருவரைப்பற்றிய படம் என்று எளிமையாக சொல்லலாம். அவன் சாதாரண மொழியில் புழங்குபவன் கூட அல்ல, இசையின் மொழியில் புழங்குபவன்.. அவளோ பேசவே முடியாதவள் எனும் போது படத்தின் கனம் கூடுகிறது. அம்மாவையும் தன்னையும் நிராதரவாக விட்டுவிட்டு அப்பா வேரொருத்தியோடு போய்விடும் போது, ஸ்தம்பித்து போகிறாள் நாயகி. + 2 படிக்கும் தன் பையன் சாலை விபத்தில் பலியான 1984 –லேயே ஸ்தம்

நாட்டுவளம் உரைத்தல்

                                                                          இந்த முறை ஊடலல்ல … முறிவு . “ பட் ” டென்ற சத்தத்துடன்   ஒட்ட   முடியாதபடி   உடைந்து விட்டது . எழுந்து நின்று ஒரு முறை சடவு முறித்தேன் “ அப்பாடா …” சொன்னால்தான் ஒழுங்காக சடவு முறியும் ஆகவே முறைப்படி   இழுத்துச்சொன்னேன் . ஐந்தாண்டுகளாக   அடக்கியாண்ட தொப்பைக்கு விடுதலையளித்தேன் . இனி மூச்சுப்பயிற்சிக்கு சோலி கிடையாது . மீசைக்குள் கத்தரியுடன் குதிக்க வேண்டியதில்லை . பெருவிரலில் மண்வெட்டி வளர்ந்தால் நறுக்க வேண்டியதில்லை . மண்டைக்குடுவையில் கண்டதையும் கலக்கி பொய் செய்ய அவசியமில்லை . நிலவு தன் சொந்த முகத்தோடு திகழ இராத்திரியை கூட்டவோ குறைக்கவோ தேவையில்லை . ஆகவே சேவல்கள் தப்பிப்பிழைத்து வாழும் நாடெந்தன் நாடே !                                                 நன்றி : கல்கி தீபாவளி மலர்

தலைவி அரற்று

ஒரே ஒரு முறை அள்ளி அணைத்திருந்தால் ஒரு வேளை செத்துப் போகாதிருந்திருப்பான். நான் தான் என் முலைகளை ஒரு கடுவனுக்கு எழுதி வைத்துவிட்டேன்.

ஆட்டுதி அமுதே !

இந்த அதிகாலை பயணிகள் இரயிலில் சுண்டல் வாடையொடு கலந்து துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது. குழந்தையான சிறுவனொருவன் என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான். இடுப்புக்கு கீழே இரண்டு குச்சிகள் ஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது. சுண்டுவிரலைப் போன்றதான கட்டைவிரல் வாயைப் போன்றதான ஓட்டைக்குள் அழுந்திக்கிடக்க நிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன. புதிதாய் வந்தமரும் ஒரு இளைஞன் தன் ஸ்மார்ட் ஃபோனை   முடுக்கி விடுகிறான். “டங்காமாரியான ஊதாரி ” எங்கள் பெட்டிக்குள் வந்து குதித்தான். நான் அந்த இளைஞனை அவன் ஃபோனை அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன். பார்க்கவே கூடாது என்று முகம் திருப்பியிருந்த படியால் பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில் கண்டேன் அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்… அப்படி.... ! அப்படி... ! விளங்காத காலே ஆயினும் அதை அப்படி ஆட்டு என் செல்லமே!                      நன்றி : ஆனந்த விகடன்

காவியம்

சூம்பிய கால்களுடன் முறுக்கிய கைகளுடன் கோணித்தவாய்ச் சிறுவனொருவன் இந்த இரயில் பெட்டியின் நீண்ட இருக்கையில் கிடக்கிறான். அவன் தலை சீட்டில் உருள்கிறது. ஏனெனில், அதன் மடிக்கு கனத்து விட்டது. கனத்தவள் ஜன்னலோரத்தில் ஓரத்தின் ஓரத்தில் இடுங்கிப் போயிருந்தாள். அவள் வெளியே வெறித்த படி வந்தாள். வெளியே கை விட்டு  காற்றை துழாவினாள். வெளியே தலை நீட்டி அங்குமிங்கும் பார்த்தாள். பாதி உடலை கம்பிக்குள் செருகி இதோ, பறந்து போகிறாள்.

நூல் அறிமுகம்- அந்திமழை இதழில்

ஐயோ… இந்தக் கரிப்பு !

எனக்கு எம்ஜியாரை அறவே பிடிக்காது அதிகாலையிலேயே அவர் கவுண் உடையில் தோன்றி ஏதோ சூளூரைத்துக்கொண்டிருந்தார். எனவே சேனலை மாற்றினேன். மாற்றிய கையோடு   எதேச்சையாய் கண்ணாடி பார்க்க அது ரசமிழந்து உளுத்திருந்தது. அதை மாற்றினேன். அழுக்கு அரசாளும் சீப்பை மாற்றினேன். இந்த பாத்ரூம் பைப்பை மாற்ற வேண்டுமென்று பல்லூழிகளாக எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று அதை மாற்றினேன். அண்ணாந்து நோக்க COFFE- யும் , தினசரியுமாக பால்கணியில் வீற்றிரு ந்தான் எதிர்வீட்டு சீமான். அவனை மாற்றினேன். என் மொபட்டை பள்ளத் துள் ஒதுக்கிவிட்டு பறக்கிறது ஒரு “ SCORPIO” அதை சைக்கிளாக மாற்றினேன். பணிமனையில் பக்கத்துசீட்டில் எப்போதும் ஓர் “ அப்போது அலர்ந்த தாமரை “ அதை மாற்றினேன். உணவுவேளையில் சோற்றுப்பொதி திறந்து அமர்ந்தால் 10 வாழ்க்கைகான உப்பை அள்ளிக் கொட்டியிருந்தாள்  பத்தினி. அந்த ரிமோட்டை என் நெற்றிப்பொட்டில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்.