ஒரு
வழியாக
கவர்மெண்ட்
கக்கூஸிலிருந்து
வெளியே
வந்து விட்டான்
துரத்தியடித்த நாய்களில்
ஒன்று
திரும்ப வந்து உறுமி
நிற்கிறது
நடப்பதும் ஊர்வதும் கண்ட
அதற்கு
தவழ்வது பிடிக்கவில்லை
இவன் பாக்கெட்டில்
கைவிட்டுத் தேடினான்
இன்னுமொரு கல்
மிச்சமிருந்தது.
அதை எடுத்து ஓங்கி
எறிந்தான்
மொழியியல் வல்லுனனும்
தன்னம்பிக்கைப் புழுத்தியும்
திடுக்கிட்டு எழுந்திருக்க
உடைந்து சிதறியது
”மாற்றுத்திறனாளி” எனும் சொற்கட்டு.
நன்றி : காலச்சுவடு - ஜுலை - 2016
Comments