Skip to main content

Posts

Showing posts from July, 2017

முக்கால் நிமிஷம்

நள்ளிரவு 2:00 மணிவாக்கில் உன் புகைப்படத்தை என் Dp- யாக வைத்தேன் பெருந்திணை அன்பின் புறநடையென்பதால் உடனே அஞ்சி அகற்றி விட்டேன். ஒரு முக்கால் நிமிஷம் நீ என் உரிமையில் இருந்தாய். அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா? நடுசாமத்தில் யார் பார்க்கப் போகிறார்கள்? ஆனாலும் யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன். ஒருவர்  கூடவா பார்த்திருக்க மாட்டார்கள்? நல்லவேளை நீ குளோசப்பில் சிரிக்கவில்லை எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது?           நன்றி: உயிர்மை- ஜூலை-2017

ஆயிரம் ஸ்தோத்ரம்

                                                           காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன அதில் மூன்றாவது சந்தில் கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள் பள்ளிச்சீருடையில் நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள் அதன் ஐந்தாவது சந்தில் 19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட அவள் அன்னை விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள் . முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார் ஒரு அரசமரத்தடி பிள்ளையார். அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும் இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார். வாயிலிருந்து விசிலை இறக்காமல் ஓடியாடி பணியாற்றுகிறார். ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல அந்தந்த சந்திற்கான வாகனங்களை மிகச் சரியாக அதனதன் வழியில் விடுகிறார். “privacy “  என்கிற சொல்லால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும் ஒருவர் போனை ஒருவர் நோண்டுவதில்லை. ஒருவர் அறையை இன்னொருவர் துப்பறிவதில்லை. நள்ளிரவில் சின்ன சத்தமும் துல்லியமாகிவிடும் என்பதால் இரண்டு போன்களிலும் “ DI